புதுச்சேரி

கோப்பு படம்.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் நகை திருட்டு

Published On 2023-08-15 13:05 IST   |   Update On 2023-08-15 13:05:00 IST
  • டிப்-டாப் பெண்கள் யாரோ ஓடும் பஸ்சில் ஷாஜிதாபர்வீன் வைத்திருந்த நகை டப்பாவை திருடி சென்றுள்ளனர்.
  • போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் கல்கி நகரை சேர்ந்தவர் அபுதாகிர். இவரது மனைவி ஷாஜிதா பர்வீன் (வயது35). சம்பவத் தன்று இவர் புதுவை முத்தியால்பேட்டையில் உறவினர் வீட்டில் நடந்த புதுமனை புகுவிழாவுக்கு கடலூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்தார்.

பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் முத்தியால்பேட்டைக்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் தான் அணிந்திருந்த நெக்லஸ், வளையல், செயின், டாலர் , தோடு, மோதிரம் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கழற்றி ஒரு சில்வர் டப்பாவில் வைத்து மூடி கை பையில் வைத்து அங்கிருந்து தனியார் பஸ் மூலம் புதுவை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார்.

அங்கு பஸ்சை விட்டு இறங்கியதும் கை பையில் நகை வைத்திருந்த சில்வர் டப்பாவை பார்த்த போது அந்த டப்பா மாயமாகி போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

டிப்-டாப் பெண்கள் யாரோ ஓடும் பஸ்சில் ஷாஜிதாபர்வீன் வைத்திருந்த நகை டப்பாவை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஷாஜிதா பர்வீன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News