தலித் விடுதலை பேரவையில் புதிய நிர்வாகிகளை படத்தில் காணலாம்.
தலித் விடுதலைப் பேரவை தலைவராக ரோக.அருள்தாஸ் மீண்டும் தேர்வு
- புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
- முத்து கிருஷ்ணன், அன்பழகன், சுப்பிரமணியன், செல்வ பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
புதுச்சேரி:
புதுவை தலித் விடுதலைப் பேரவையின் 23-ம் ஆண்டிற்கான மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ரோக.அருள்தாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான தேர்தல் அதிகாரியாக புதுவை மாநில கபடி சங்க பொதுச் செயலாளர் தமிழரசன், நிர்வாக செயலாளர் மணிவண்ணன், ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மாநிலத் தலைவராக மீண்டும் ரோக.அருள்தாஸ் தேர்வு செய்யப் பட்டார். மேலும் மாநில பொதுச் செயலாளராக பொன்னிவேல், பேரவை தலைவராக முருகையன், செயல் தலைவராக பாபு ராஜ் பொன்ரோ, அமைப்புச் செயலாளராக கண்ணன், மாநில அமைப்பாளர் ரஞ்சித், தலைமை நிலைய செயலாளர் இளவயதன், மாநில செயலாளர்கள், பாலச்சந்திரன், மாரியப்பன், ஒருங்கிணைப்பாளர் மகேந்திர வேலன், நிதி செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம், நகர அமைப்பாளர் ஹரிஹரன், நகர செயலாளர் முனியன், ஆலோசனை குழு தலைவர் முத்து என்ற ஆத்தங்கரையான்,
அரசியல் குழு தலை வராக முன்னாள் கவுன்சிலர் வீரசெல்வம், இளைஞர் அணி தலைவர் மாய கிருஷ்ணன், மாணவர் அணி தலைவர் தமிழ் மன்னன் தொண்டரணி தலைவர் ராஜவேலு, நிர்வாக பொது செயலாளர் போத்திராஜ், நிர்வாகத் தலைவர் ராஜா, தெற்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன், மாநில தொண்டரணி பொதுச் செயலாளர் அன்பு, மாநில துணை தலைவர்கள் ராஜேந்திரன், தனவேலு நிர்வாக செயலாளர் ராஜா, நிர்வாக தலைவர் கருணாகரன், நிர்வாக அமைப்பாளர் அய்யனார், மாநில பொருளாளராக பாலகிருஷ்ணன், மாநில துணை தலைவர் ஆண்டவர், மாநில துணை அமைப்பாளர் சேஷா, உள்ளிட்ட 55 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அம்பேத்கர் பேரவை தலைவர் திருமால், கலைமணி, முத்து கிருஷ்ணன், அன்பழகன், சுப்பிரமணியன், செல்வ பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
முடிவில் மாநிலச் செயலாளர் ரகோத்தமன் நன்றி கூறினார்.