புதுச்சேரி

அரசு குடியிருப்புகள் புதுப்பிக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

அரசு குடியிருப்புகள் புதுப்பிக்கும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-07-15 11:34 IST   |   Update On 2023-07-15 11:34:00 IST
  • பொதுப் பணித்துறை மூலம் சீரமைக்கப்பட்ட உள்ளது.
  • உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி முதலியார்பேட்டை உழந்தை குடியிருப்பில் உள்ள டைப் 2 மற்றும் டைப் 3 வகை குடியிருப்பு கழிப்பறைகளில் கதவுகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பழுதடைந்துள்ளது.

இதனை ரூ.14.99 லட்சம் மதிப்பில் பொதுப் பணித்துறை மூலம் சீரமைக்கப்பட்ட உள்ளது. இப்பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தனது மனைவி ஜெசிந்தாவுடன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பொதுப்பணித்துறை செற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News