புதுச்சேரி

சிந்தனையாளர் பேரவைத் தலைவர் கோ.செல்வம் மாவட்ட கலெக்டர் வல்லவனிடம் அளித்த காட்சி.

பேனர்-கட்அவுட்களை அகற்ற வேண்டும்

Published On 2023-08-06 11:01 IST   |   Update On 2023-08-06 11:01:00 IST
  • சிந்தனையாளர் பேரவை கலெக்டரிடம் மனு
  • ஒரு அழகிய சின்னஞ்சிறு நகரம். இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பணிகள் வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சிந்தனையாளர் பேரவைத் தலைவர் கோ.செல்வம் மாவட்ட கலெக்டர் வல்லவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை ஒரு அழகிய சின்னஞ்சிறு நகரம். இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பணிகள் வருகின்றனர். இதற்கிடையே புதுவை நகரப்பகுதிகளில் ஆங்காங்கே கட்அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

பொது இடங்களில் பேனர்கள் கட் அவுட்கள் வைக்க சென்னை ஐக்கோர்டு தடைவிதித்துள்ளது.

ஆனால் இது புதுவையில் மீறப்படுகிறது. எனவே நகரப்பகுதிகளில் வைக்க ப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும். மேலும் நகராட்சி சட்டப்படி பேனர்கள் வைக்கப்பட்டால் அதுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்தால் வருமானம் இல்லாமல் தடுமாறும் புதுவை அரசுக்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News