புதுச்சேரி

கோப்பு படம்.

பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம்

Published On 2023-07-05 11:27 IST   |   Update On 2023-07-05 11:27:00 IST
  • 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பஞ்சு 45 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
  • தற்போது பெய்து வரும் கோடை மழையினால் பருத்தி விவசாய நோய் தொற்று ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டத்தில், 3 போகம் நெல் விளைந்த பூமியில் படிப்படியாக பருத்தி விவசாயத்தை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஆயிரத்து 200 ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு 4 ஆயிரத்து 500 ஏக்கரில் பருத்தி பயிரிடப் பட்டுள்ளது. 2022-ல் ஒரு கிலோ பஞ்சு ரூபாய் 120க்கு கொள்முதல் செய்யப்பட்டது. 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பஞ்சு 45 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பருத்தி விவசாயிகள் செம்பேன், வெள்ளை பூச்சி, மாவு பூச்சி நோய் பாதிப்புகளில் இருந்து பருத்தி விவசாயத்தை பாதுகாக்க பெருமளவு பணம் செலவழிக்க வேண்டி உள்ளது.

உரிய காலத்தில் கடனை பெற்றாவது தடுப்பு நடவடிக்கை செய்யத் தவறினால் ஒட்டுமொத்த பருத்தி விவசாயமும் அழிந்துவிடும் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளனர். மேலும் வழக்கத்திற்கு மாறாக தற்போது பெய்து வரும் கோடை மழையினால் பருத்தி விவசாய நோய் தொற்று ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.

மாநில அரசு பருத்தி விவசாயிகள் வாழ்வை காத்திட ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும், பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து காப்பீட்டுத் தொகை ரூ.30 ஆயிரம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில விவசாயிகளின் பயிர் கடன்களை அரசு அறிவித்தபடி ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News