புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. மழையால் வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய காட்சி.

மழையால் வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு நிவாரணம்

Published On 2023-07-07 11:48 IST   |   Update On 2023-07-07 11:48:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • மழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி பாரதி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் இவ ரது சிமெண்ட் ஓடுபோட்ட வீடு சேதமடைந்து சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அந்த குடும்பத்தினருக்கு வீட்டை சீரமைக்க கென்னடி எம்.எல்.ஏ ரூ.10 ஆயிரம் மற்றும் தார்பாய் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கி ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சியின் போது தி.மு.க கிளை செயலாளர்கள் பஸ்கல், விநாயகமூர்த்தி, இருதயராஜ், ரகேஷ், கவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News