புதுச்சேரி

முத்தியால்பேட்டை தொகுதி சின்னாத்தா மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் புனரமைக்கும் பணியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

சின்னாத்தா அரசு பள்ளி ரூ.45 லட்சத்தில் புனரமைப்பு

Published On 2023-08-11 14:06 IST   |   Update On 2023-08-11 14:06:00 IST
  • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
  • வகுப்பறைகள் புனரமைப்பு செய்வதற்கான பூமி பூஜை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பள்ளி வளாகத்தில் நடந்தது.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வீதியில் அமைந்துள்ள சின்னாத்தா மேல்நிலை ப்பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் பழுதடைந்து இருந்தது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொகுதி எம்.எல்.ஏ பிரகாஷ்குமாரிடம் வகுப்பறைகளை புனரமைப்பு செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். உடனே பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து சின்னாத்தா மேல்நிலைப்பள்ளி கட்டிட ங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பழுந்தடைந்த அனைத்து வகுப்பறை கட்டிடங்களை யும் சரிசெய்ய பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. அரசுக்கு கோரிக்கை வைத்து நிலையில், ரூ.45 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புனரமைப்பு செய்வதற்கான பூமி பூஜை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பள்ளி வளாகத்தில் நடந்தது. அவர் பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில், சின்னதா மேல்நிலைப்பள்ளி முதல்வர் சாய்வர்கீஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்வித்துறை, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் கோட்டம் 2 செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் ராமதாசன் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News