புதுச்சேரி

கோப்பு படம்.

இளைஞர்களை ரங்கசாமி எச்சில் மது கிளாஸ் கழுவ சொல்கிறார்-நாராயணசாமி கடும் தாக்கு

Published On 2023-04-16 11:23 IST   |   Update On 2023-04-16 11:23:00 IST
  • பாகூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து கன்னியக் கோவில், பச்சைவாழியம்மன் கோவில் அருகே சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
  • போராட்டத்தில் பஞ்சாயத்து தராஜ் அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், எஸ்.சி. பிரிவு இணை செயலர் அன்பழகன், விவசாய அணி தலைவர் அரிகிருஷ்ணன், மீனவரணி போத்திராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி:

பாகூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து கன்னியக் கோவில், பச்சைவாழியம்மன் கோவில் அருகே சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

பொதுச்செயலாளர் மணவாளன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் கோபு முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், விஜயவேணி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பஞ்சாயத்து தராஜ் அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், எஸ்.சி. பிரிவு இணை செயலர் அன்பழகன், விவசாய அணி தலைவர் அரிகிருஷ்ணன், மீனவரணி போத்திராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

சிலிண்டருக்கு ரூ.300 மானியம் அறிவித்துள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி, பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. புதுவையில் மதுக்கடைகளை திறக்க வேண்டாம். குடித்துவிட்டு பலர் இறப்பதால் பெண்கள் அதிகமாகி, ஆண்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொன்னால், வேலைவாய்ப்பு இல்லை.

நடன பார் திறந்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என ரங்கசாமி கூறுகிறார். பிரதமர் பெரிய மோடி என்றால், ரங்கசாமி சின்ன மோடி. வேலை இல்லாத இளைஞர்கள் பக்கோடா சுடுங்கள் என்றார் மோடி. ரங்கசாமி படித்த இளைஞர்களை மதுக்கடையில் எச்சில் கிளாசை கழுவுங்கள் என்கிறார். ரங்கசாமி ஆட்சியில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

போதைப் பொருட்களான கஞ்சா, அபின் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிந்து, மதுபோதையில் நள்ளிரவில் ஆட்டம் போடுகின்றனர். மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டு சுற்றுலாவை வளர்க்கப்போவதாக ரங்கசாமி கூறுகிறார்.

இரவில் போடும் ஆட்டத்தால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை.ரங்கசாமி ஆட்சியில் வளர்ச்சி இல்லை. எல்லாவற்றையும் அறிவிப்பார், ஒன்றையும் செய்ய மாட்டார். மக்களை ஏமாற்றி முதல அமைச்சர் ஆகியுள்ளார்.

அவர் போலி சித்தர். மக்களை ஏமாற்றும் சித்தர். ரங்கசாமி ஆட்சியில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. புதுவையில் உள்ள இடங்களை எம்.எல்.ஏ.க்கள் பட்டா போட்டுக்கொள்கின்றனர்.

இப்படி ஊழல் நிறைந்த மக்களை மதிக்காத ஆட்சி நடக்கிறது. இதற்கு முடிவு கட்ட காங்கிரசார் ஒன்றிணைந்து செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News