புதுச்சேரி

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

சுத்திகரிப்பட்ட குடிநீர் நிலையம்-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

Published On 2022-11-07 14:18 IST   |   Update On 2022-11-07 14:18:00 IST
  • மங்கலம் தொகுதி ஆச்சார்யாபுரம் அன்புநகர், மங்கலம் உள்ளிட் பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை எனவும், அசுத்தம் கலந்த குடிநீர் வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
  • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

புதுச்சேரி:

மங்கலம் தொகுதி ஆச்சார்யாபுரம் அன்புநகர், மங்கலம் உள்ளிட் பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை எனவும், அசுத்தம் கலந்த குடிநீர் வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ரூ.22 லட்சம் செலவில் அப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

இதற்காகான பணி தொடக்க விழா நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், இளநிலைபொறியாளர் ரங்கமன்னார் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News