புதுச்சேரி

கோப்பு படம்.

சீனியாரிட்டி பாதிப்பை கண்டித்து புதுவை அமைச்சக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Published On 2023-07-27 12:21 IST   |   Update On 2023-07-27 12:21:00 IST
  • கூட்டத்தில் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
  • 600-க்கும் மேற்பட்டோர் உதவியாளர் பணியிலிருந்து யூ.டி.சி.யாக பதவி இறக்கம் செய்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர் சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டத்துக்கான அவசர கூட்டம் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.

பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் திடீர் கொள்கை மாற்றத்தால் பல வழக்குகள் நாளுக்கு நாள் கோர்ட்டுக்கு வருகிறது.

இதனால் 600-க்கும் மேற்பட்டோர் உதவியாளர் பணியிலிருந்து யூ.டி.சி.யாக பதவி இறக்கம் செய்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்றவர்களின் சீனியாரிட்டி பாதிக்கப்படும். எனவே இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

Tags:    

Similar News