கோப்பு படம்.
புதுவை பா.ஜனதா அமைச்சருக்குகூடுதல் இலாக்கா-முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒதுக்கீடு
- புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது.
- முதல்- அமைச்சர் ரங்கசாமி, தன்வசம் இருந்த இந்த துறையை பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வழங்கியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது.
புதுவை அமைச்ச ரவையில் உள்துறை, குடிமை ப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்களாக பா.ஜனதாவை சேர்ந்த நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் நமச்சிவாயம் வசம் உள்துறை, மின்துறை, கல்வித்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை, விளையாட்டு துறை உள்ளிட்ட துறைகள் உள்ளது.
இந்த நிலையில் கூடுதலாக அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் ரங்கசாமி, தன்வசம் இருந்த இந்த துறையை பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வழங்கியுள்ளார்.
புதுவையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர அரசுபல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளில் அமைச்சர் நமச்சிவாயம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கூடுதலாக ஒதுக்க ப்பட்டுள்ளது.