புதுச்சேரி

வீரர்களுக்கு கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ரராஜன் சீருடை வழங்கி வாழ்த்திய காட்சி.

புதுவை வீரர்கள் உத்தரபிரதேசம் பயணம்

Published On 2022-12-05 14:40 IST   |   Update On 2022-12-05 14:40:00 IST
  • உத்தரபிரதேசம் மாநில லக்னோவில் 17-வது இந்திய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
  • புதுவை மாநில ரோகிட் பந்து கழக செயலாளருமான புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடைய வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி:

உத்தரபிரதேசம் மாநில லக்னோவில் 17-வது இந்திய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

இப்போட்டியில் பங்கேற்க புதுவை வீரர்கள் உத்தரபிரதேசம் புறப்பட்டு சென்றனர். இவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் விழா கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் அணியினருக்கு புதுவை கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ரராஜன், சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் ரத்தினபாண்டியன், பயிற்சியாளரும், புதுவை மாநில ரோகிட் பந்து கழக செயலாளருமான புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடைய வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News