புதுச்சேரி

கோப்பு படம்.

10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு புதுவை பா.ஜனதா வரவேற்பு

Published On 2023-07-26 13:35 IST   |   Update On 2023-07-26 13:35:00 IST
  • கூட்டணி அரசின் 10 சதவிகித உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
  • ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஏழை மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாக திகழ்ந்து வருகிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனையாகும். 50 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகள், அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றங்கள் பற்றி சிந்திக்கவில்லை

மேலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் தற்போது அரசுப் பள்ளி யில் படிக்கும் மாண வர்களின் கல்வி தரம் உயர வேண்டும் என்பதற்காக ஏற்கனவே சிபிஎஸ்சி பாடத் திட்டத்தை தாய்மொழியில் கல்வி கற்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் மேலும் ஒரு வாய்ப்பாக புதுவையில் தேசிய ஜனநாயக அரசு 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தொடர்ச்சியாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு அளித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பது அரசு பள்ளி யின் மீது பொதுமக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அரசுப் பள்ளியில் படித்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும் வகிக்கின்ற நிலையில், புதுவை கூட்டணி அரசின் 10 சதவிகித உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். போன்ற உயர்கல்வி படிப்பினை ஏழை எளிய மாணவர்கள் அடைந்திட இது வழிவகுக்கும். ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஏழை மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாக திகழ்ந்து வருகிறது.

எதிர்காலத்தில் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர நம்பி க்கையை ஏற்படுத்தும் இந்த முடிவை எடுத்த அரசுக்கு பள்ளி மாணவர்கள் சார்பாகவும் பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News