புதுச்சேரி

புரிந்துணர்வு ஒப்பந்தம்

லண்டன் பட்டய கணக்காளர்கள் சங்கத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-10-14 11:48 GMT   |   Update On 2022-10-14 11:48 GMT
  • தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டம்.
  • தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழக மேலாண்மை வணிகவியல் துறை, லண்டனில் உள்ள சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் பட்டய (ஏசிசிஏ) சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய பல்கலைக்கழக இயக்குனர் கே.தரணிக்கரசு, தேசிய கல்விக் கொள்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏ.சி.சி.ஏ. கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய சூழ்நிலையில் தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை மற்றும் பணிச் சூழல் மாறுதல்களின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்தராய, ஏ.சி.சி.ஏ-வின் தென்னிந்திய தலைவர் சரவணகுமார், சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜூ, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News