புதுச்சேரி

லக்னோ செல்லும் வீரர்களை தேக்வாண்டோ விளையாட்டு சங்கநிறுவனர் ஸ்டாலின், தீயணைப்பு துறை அதிகாரி ரித்தோஷ்சந்திரா ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பிய காட்சி.

புதுவை வீரர்கள் லக்னோ பயணம்

Published On 2023-07-27 07:54 GMT   |   Update On 2023-07-27 07:54 GMT
  • அதிகாரி ரித்தோஷ்சந்திரா ஆகியோர் வீரர்களை வாழ்த்தி, உபகரணங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
  • பொருளாளர் அரவிந்த், டெக்னிக்கல் சேர்மன் பகவத்சிங், அஸ்வினி, கீர்த்தனா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

தேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 6-வது தேசிய கேடட் தேக்வாண்டோ குறுகி மற்றும் பூம்சே போட்டிகள்  27 -ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கே.டி.சிங் பாபு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

இப்போட்டிக்கு, புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் அமலோற்பவம் பள்ளி பிஸ்வநாத் பியூரா, கேந்திர வித்யாலயா பள்ளி லக்ஷன்வெங்கட், ஏகலைவா பள்ளி நிஷர்ஷன், ஆதித்யா வித்யாஸ்ரமம் பள்ளி ஷரோன் தீப், வித்யா நிக்கேதன் பள்ளி கோகுல்ராஜா, விவேகானந்தா பள்ளி சஞ்சீவி, ரிதிவ்சந்திரா, வாசவி பள்ளி ஜெயதேவ், செவன்த்டே பள்ளி திவ்யா, சவரிராயலு நாயக்கர் பள்ளி ரீனா ஜோஸ்பின், புளுஸ்டார் பள்ளி பொழிலன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இவர்கள், தலைமை பயிற்சியாளர் நந்தகுமார், பயிற்சியாளர் மதன், மேலாளர் தேவி மற்றும் நடுவர்களாக தக்ஷிணபிவுடன் லக்னோ செல்கின்றனர்.

புதுச்சேரி ரெயில் நிலையத்தில் புறப்பட்ட மாணவர்களை தேக்வாண்டோ விளையாட்டு சங்கநிறுவனர் ஸ்டாலின், தீயணைப்பு துறை அதிகாரி ரித்தோஷ்சந்திரா ஆகியோர் வீரர்களை வாழ்த்தி, உபகரணங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மூர்த்தி, ஆறுமுகம், பொதுச்செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், டெக்னிக்கல் சேர்மன் பகவத்சிங், அஸ்வினி, கீர்த்தனா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News