புதுச்சேரி

100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை: புதுவை முதல்வர் அறிவிப்பு

Published On 2022-08-29 15:17 GMT   |   Update On 2022-08-29 15:17 GMT
  • முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக முதல்வர் தகவல்
  • கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்

புதுச்சேரி:

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

90 வயது முதல் 100 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 3500 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

Tags:    

Similar News