புதுச்சேரி

கோப்பு படம்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

Published On 2023-06-29 06:13 GMT   |   Update On 2023-06-29 06:13 GMT
  • அ.தி.மு.க. வலியுறுத்தல்
  • 100-க்கணக்கான ஒட்டல் உரிமையாளர்கள் கடற்கரை மணல் பகுதிகளில் வேலி அமைத்து, டெண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக அபகரித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து, போலி பட்டா மாற்றம் செய்து முறைகேடுகள் நடத்தியதாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பத்திர பதிவுத் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் பத்திர பதிவுத் துறை இணையதளத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக காணாமல் போய் உள்ளது.

திட்டமிட்டு இந்த தவறை துறை அதிகாரிகள் தைரியத்துடன் செய்துள்ளதாக தெரிகிறது.

இது புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு ஆகும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் துச்சமென நினைத்து ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் அமர்த்தபட்டனர்.

தற்போது செவிலியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

இதில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு பணி வழங்க வேண்டும் அல்லது பணி நியமன விதிப்படி பணிக்கு ஆட்கள் எடுக்கும் போது ஏற்கனவே கொரோனா காலத்தில் பணிபுரிந்து வந்த செவிலியர்களுக்கு 25 சதவீதம் மதிப்பெண் கொடுத்து அவர்கள் பணியில் சேருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

புதுவை மாநிலம் முழு வதும் தற்போது கடற்கரைப் பகுதிகள் தனியாரால் அபகரிக்கப்பட்டு வருகிறது. 100-க்கணக்கான ஒட்டல் உரிமையாளர்கள் கடற்கரை மணல் பகுதிகளில் வேலி அமைத்து, டெண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக அபகரித்து வருகின்றனர்.

அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்து வருகின்றனர். போலி பத்திரம் மூலம் 15 கி.மீ தூரம் உள்ள கடற்கரையை அபகரிக்கும் சூழல் உள்ளது. வழக்கம் போல் அரசு பாராமுகம் போல் இல்லாமல் தனி யார்கள் ஆக்கிரமிப்பு செய்வது தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒரு ஆட்டோவில் 6 மாணவர்களை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமான மாணவர்கள் ஏற்றி செல்லக்கூடாது. என்ன சட்டம் உள்ளதோ அதனை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். அதிகப்படியாக மாணவர்களை ஏற்றி செல்வது தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News