புதுச்சேரி

கோப்பு படம்.

முதல்-அமைச்சரின் சுதந்திர தின உரை பாராளுமன்ற தேர்தலுக்கான உரையாகவே உள்ளது

Published On 2023-08-17 14:12 IST   |   Update On 2023-08-17 14:12:00 IST
  • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் குற்றச்சாட்டு
  • மாநிலம் முழுவதும் தெருவுக்கு 10 ரெஸ்ட்ரோ பார்களை திறந்தது தான் இவரது முக்கிய சாதனையாக உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு சாதனைகள் செய்ததாக பெரிய பட்டியலிட்டு தெரிவித்து ள்ளார்.

இது சுதந்திர தின உரை போன்று அமையாமல் வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக அவர் பேசியுள்ளார்.

புதுச்சேரி அரசு பல்வேறு சாதனைகள் செய்ய உள்ளதாக தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக கூறி வருகிறார்.

பட்ஜெட் உரையின்போ தும் இதே கருத்தை தான் பலமுறை வலி யுறுத்தி யுள்ளார். ஆனால் எவற்றையும் செயல்படுத்தி உள்ளதாக தெரியவில்லை.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் தெருவுக்கு 10 ரெஸ்ட்ரோ பார்களை திறந்தது தான் இவரது முக்கிய சாதனையாக உள்ளது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது.

அதே போல் இவர் தெரிவி த்ததற்கு மாறாக வீட்டு வரியுடன் குப்பை வரியும் வசூலி க்கப்படுகிறது.

சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தினசரி அனைத்து சாலை களிலும் போக்குவரத்து நெருக்கடி நிகழ்கின்றது, போலி பத்திர பதிவுகள் தொடர்ந்து எந்தவித அச்சமும் இன்றி நடைபெற்று வருகின்றது , இந்த அரசு பதவி ஏற்று பல புகார்கள் அளித்தாலும் சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

தரமற்ற சாலைகள், தனியார் மின்மய கொள்கை, தொடர் மின்வெட்டு, தரமற்ற குடிநீர் வசதி, நிர்வாக திறமையின்மையால் அதிகாரிகளை குறை கூறுவது, புதுச்சேரி மாநிலம் கல்வி கேந்திரமாக இல்லாமல் கல்வி வியாபாரி களை ஊக்குவிக்கும் பகுதியாக மாறி உள்ளது. எனவே சுதந்திர விழா உரை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான உரையாகவே உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News