புதுச்சேரி

கோப்பு படம்.

கனமழையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை-அ.தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-10-31 09:06 GMT   |   Update On 2022-10-31 09:06 GMT
  • புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை முதல் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சம்பந்தப்பட்ட பொதுப்ப–ணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவை இணைந்து முன்னெச்சரிக்கை நடவ–டிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் நகரப் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி மக்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாக்கப்ப–ட்டனர். கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரைப் பகுதிகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும் விதத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளின் உயர்மட்ட குழு கூட்டத்தை கலெக்டர் உடனடியாக கூட்ட வேண்டும்.

தாழ்வான மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தனியார், அரசு பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றின் இடங்களை குறிப்பிட்டு சில நாட்களுக்கு வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருமழையால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உடனடி உணவு வழங்க அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News