கோப்பு படம்.
தனியாருக்கு ஆதரவாக மின் கட்டணம் உயர்வு-காங்கிரஸ் கண்டனம்
- புதுவை மின்துறையை தனியாருக்கு முழுமையாக தாரை வார்த்து விட்டீர்களா, இல்லையா?
- விற்று விடுவது என்று முடிவு செய்து அதற்கான டெண்டர் விட்டுள்ள நிலையில் தற்போது மின்சார கட்டணத்தை அவசர அவசரமாக உயர்த்தியது எதற்கு?
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-
புதுவை மின்துறையை தனியாருக்கு முழுமையாக தாரை வார்த்து விட்டீர்களா, இல்லையா? மின்சாரம் வாங்குவது, பராமரிப்பது, மற்றும் விநியோகிப்பது என்ற மூன்றையுமே தாரை வார்க்க போகிறீர்களா ?
சட்டமன்றத்தில் அறிவித்தீர்களே, இதில் 51 சதவீதம் யாருக்கு.? 49 சதவீதம் யாருக்கு.? தனியாருக்கு தாரை வார்க்கும் மின் துறையில், சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் செலவு செய்து, டிஜிட்டல் மீட்டர்கள், ப்ரீபெய்டு மீட்டர்கள் மற்றும் சில கருவிகள் வாங்கியது ஏன்?
விற்று விடுவது என்று முடிவு செய்து அதற்கான டெண்டர் விட்டுள்ள நிலையில் தற்போது மின்சார கட்டணத்தை அவசர அவசரமாக உயர்த்தியது எதற்கு? மின்துறையை வாங்கும் தனியாருக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்பது மக்களுக்கு நன்றாகவே புரிகிறது.
விவசாயிகளுக்கு குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது தொடருமா ? லாபத்தில் இயங்கும் ஆயிரக்கணக்கான பொறியாளர்களும் தொழி லாளர்களும் பணிபுரியும் இந்த மின் துறையை கார்ப்பரேட்டுக்கு விற்பது என்பது மிகவும் நியாயமா.?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.