புதுச்சேரி

திருபுவனை காவல் நிலையத்தில் போலீசார் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர் கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் பேசிய காட்சி.

போலீசார்-மாணவர்கள் கலந்தாய்வு கூட்டம்

Published On 2023-06-17 10:57 IST   |   Update On 2023-06-17 10:57:00 IST
  • அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி முன்னிலை வகித்தார்.
  • பிரச்சினைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

புதுச்சேரி:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒற்றுமை என்ற அமைப்பின் ஒரு அங்கமாக மாணவர்களி டையே காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருபுவனை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வரவேற்று பேசினார்.

கூட்டத்திற்கு திருவண்டார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி முன்னிலை வகித்தார்.

பள்ளி மாணவ-மாணவி கள் இந்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். 

Tags:    

Similar News