புதுச்சேரி

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்திய காட்சி.

போலீசார் இரவு நேர ரோந்தை முடுக்கிவிட வேண்டும்

Published On 2023-07-27 08:24 GMT   |   Update On 2023-07-27 08:24 GMT
  • அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு
  • காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் கூட்டினார்.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு நடந்து வருகிறது.

மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளை ஒரு கும்பல் திட்டமிட்டு திருடியது. இது புதுவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம்  கூட்டினார். காவல்துறை தலைமை யகத்தில் கூட்டம் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். டி.ஜி.பி சீனிவாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், புதுவையில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு தொடர்பாகவும், கஞ்சா, போதைப்பொருட்கள், வெடிகுண்டு கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், இரவில் குடித்துவிட்டு வாகனங்களை

செல்வதை கண்காணிக்கவும், வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தினார்.

மேலும் இரவு நேர ரோந்துகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News