கோப்பு படம்.
பா.ஜனதாவின் முகத்தில் மக்கள் கரியை பூசி வருகின்றனர்
- எதிர்கட்சித்தலைவர் சிவா ஆவேசம்
- பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தை நாட்டு மக்கள் வேதனையோடு பார்க்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. மகளிரணி சார்பில் சுதேசி மில் அருகே மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான சிவா பேசியதாவது: -
இந்தியாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை பா.ஜனதா ஆட்சி செய்தால் வளர்ச்சி குறைந்து விடும். பா.ஜனதாவின் ஆட்சி நடைபெறும் மணிப்பூர் மாநில சம்பவம் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது.
பிரதமர் மோடி இதைப்பற்றி 70 நாட்க ளுக்கும் மேலாக வாய்மூடி மவுனமாக இருந்துள்ளார். பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தை நாட்டு மக்கள் வேதனையோடு பார்க்கின்றனர்.
நாடே பற்றி எரிகிறது. பெண்கள் கொதித்தெழுந்து ள்ளனர். இந்தியா முழுவதும் அனைத்து கட்சியும் போராட்டம் நடந்து வருகிறது. பா.ஜனதாவின் முகத்தில் மக்கள் கரி பூசி வருகின்றனர். பழங்குடியின பெண்ணை ஜனாதிபதியாக நியமித்தாலும், மணிப்பூரில் அநீதி இழைத்துள்ளார்கள்.
மணிப்பூர் மாநில அரசை பிரதமர் கண்டிக்கவில்லை. இந்த பா.ஜனதா மோடி அரசை தூக்கி எறியும் காலம் வரும்.
மணிப்பூர் கலவரம் மூலமாக பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எதிர்கட்சியை ஒடுக்கும் வேலையை பா.ஜனதா அரசு செய்து வருகிறது.
ஆனால் நம் கூட்டணி எதைப்பற்றியும் கவலைப் படவில்லை. மதச்சார்பற்ற கூட்டணி அரசை வெற்றி பெறச் செய்ய நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.