புதுச்சேரி

வாகனம் நிறுத்துமிடத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். அருகில் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் பலர் உள்ளனர்.

அரசு திருமண மண்டபத்திற்கு வாகனம் நிறுத்துமிடம்

Published On 2023-04-27 06:31 GMT   |   Update On 2023-04-27 06:31 GMT
  • அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது.
  • ரூ.7.50 லட்சம் செலவில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

புதுச்சேரி:

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து கீழ் செயல்படும் பாகூர் கமலா நேரு திருமண மண்டபத்திற்கு நீண்ட நாட்களாக வாகனம் நிறுத்துமிடம் இல்லாமல் அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து பாகூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 7.50 லட்சம் செலவில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

இதற்கான பணி முடிந்த நிலையில் திறப்பு விழா  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் புனிதவதி, மற்றும் அப்பகுதி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News