புதுச்சேரி

அரவிந்தர் அறையை தரிசிக்க ஆசிரமம் முன்பு திரண்டிருந்த பக்தர்கள்.

பக்தர்கள் தரிசனத்திற்காக மகான் அரவிந்தர் அறை திறப்பு

Published On 2023-04-24 15:05 IST   |   Update On 2023-04-24 15:05:00 IST
  • அரவிந்தர் ஆசிரமத்தில் ஆசிரமவாசிகளின் சிறப்பு கூட்டு தியானம் நடந்தது.
  • குழந்தையாக பிறந்தார் 1914-ம் ஆண்டு ஆர்யா பத்திரிகையில் பணிபுரிய புதுவையில் அரவிந்தரை சந்தித்தார்.

புதுச்சேரி:

புதுவையில் புகழ்பெற்ற அரவிந்தர் அன்னை ஆசிரமம் உள்ளது. பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மிரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி பாரீசில், துருக்கியை சேர்ந்த எகிப்து யூத தம் பதிக்கு 2-வது குழந்தையாக பிறந்தார் 1914-ம் ஆண்டு ஆர்யா பத்திரிகையில் பணிபுரிய புதுவையில் அரவிந்தரை சந்தித்தார்.

பின் முதலாம் உலகப்போர் காரணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்று சிறிதுகாலம் வாழ்ந்தார். 1920-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி புதுவைக்கு இறுதியாக வந்து அரவிந்தருடன் ஆன்மீக பணியில் ஈடுபட்டார்.

அன்னை வாழ்ந்த காலத்தில் அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள தனது அறை அருகில் உள்ள பால்கனியில் நாள்தோறும்  6 மணிக்கு நின்று பக்தர்களை ஆசீர்வதித்து தனது  தொடங்குவது வழக்கம். அன்னை இறுதியாக புதுவைக்கு வந்து நிரந்தரமாக தங்கிய தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் ஆசிரமவாசிகளின் சிறப்பு கூட்டு தியானம் நடந்தது. தொடர்ந்து அரவிந்தர் அறை காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. உள்ளூர், வெளிமாநில பக்தர்கள் அரவிந்தர் அறையை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News