கோப்பு படம்.
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர்கள் கைது
- ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.
- அப்போது மோட்டார் சைக்கிளில் நின்றபட 2 பேர் செல்போனில் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து கொண்டிருந்ததை கண்டனர்.
புதுச்சேரி:
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.
புதுவை முதலியார்பேட்டை அவ்வை வீதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் நின்றபட 2 பேர் செல்போனில் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து கொண்டிருந்ததை கண்டனர்.
இதனைதொடர்ந்து 2பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொசப்பாளையம் செல்லபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெய்கணேஷ் மற்றும் முதலியார்பேட்டை பாரதிதாசன் நகரை சேர்ந்த ராஜி(78) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி முடிவுகளை எழுதி வைத்திருந்த நோட்டு புத்தகம், 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.9 ஆயிரத்து 250 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.