புதுச்சேரி

கோப்பு படம்.

உள்ளாட்சி காலி பணியிடங்களை நிரப்ப கவனம் வேண்டும்-ஓம்சக்திசேகர் வலியுறுத்தல்

Published On 2022-12-21 10:15 IST   |   Update On 2022-12-21 10:15:00 IST
  • மக்கள் அன்றாடம் பயன் பெறக்கூடிய துறைகளில் உள்ளாட்சி துறை முக்கியமான ஒன்று. வீட்டு வரி, பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், பதிவு திருமணம் போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சா யத்துகளில் நடக்கிறது.
  • புதுவை நகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் 33 பேருக்கு பதிலாக 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். உழவர்கரை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் இதே நிலை உள்ளது.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் அன்றாடம் பயன் பெறக்கூடிய துறைகளில் உள்ளாட்சி துறை முக்கியமான ஒன்று. வீட்டு வரி, பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், பதிவு திருமணம் போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சா யத்துகளில் நடக்கிறது.

உள்ளாட்சி துறையில் பல பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிறந்த பதிவில் பெயர் மாற்றம்,பெயர் திருத்தம் போன்ற சிறு நடவடிக்கைகள் மேற்கொள்ள 3 மாத காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் மாற்று சான்றிதழில் பிறப்பு திருத்தம் செய்ய பல துயரங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

அலைக்கழிப்பு ஏற்பட்டு மக்களிடையே வெறு ப்புணர்வு ஏற்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் தகராறு நிலவுகிறது. புதுவை நகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் 33 பேருக்கு பதிலாக 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். உழவர்கரை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் இதே நிலை உள்ளது.

எனவே உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News