புதுச்சேரி

கோப்பு படம்.

நடன பார்களில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

Published On 2023-05-26 10:48 IST   |   Update On 2023-05-26 10:48:00 IST
  • விதி களை மீறி செயல்படும் பார்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.
  • தனிப்படையினர் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் நள்ளிரவுக்கு மேல் செயல்படுகிறதா?

புதுச்சேரி,மே.26-

புதுவை கலால்துறை துணை ஆணையர் குமரன், துறை தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுவையில் ரெஸ்டோ பார் எனப்படும் நடன பார் மற்றும் பப் ஆகியவை நள்ளிரவு 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. ஒரு சில பார்கள் நள்ளிரவு 12 மணிக்கு பிறகும் செயல்படு வதாக புகார்கள் வருகின்றன. இதை தனிப்படையினர் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் நள்ளிரவுக்கு மேல் செயல்படுகிறதா? என சோதனை செய்ய வேண்டும்.

இதுகுறித்து தனிப் படைக்கு பொறுப்பு வகிக்கும் அதகாரி ஆய்வு குறித்த பட்டியலை பராமரிக்க வேண்டும். விதி களை மீறி செயல்படும் பார்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News