புதுச்சேரி

அலை டு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு ‘டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ்’ தரவரிசை சான்று வழங்கிய காட்சி.

'அலை டு ஹெல்த் சயின்ஸ்' துறைகளுக்குஇந்தியாவின் நிலையான பசுமை தரச்சான்று

Published On 2023-04-06 05:36 GMT   |   Update On 2023-04-06 05:36 GMT
  • உயர்கல்வி நிறுவனங்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டு டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ் தரவரிசை வழங்கி வருகிறது.
  • சமூக சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

இந்தியாவின் நிலையான நிறுவனங்களின் பசுமை தரவரிசை 2023 அங்கீகாரமானது ஆர்-உலக நிறுவன தரவரிசை அமைப்பின் மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டு டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ் தரவரிசை வழங்கி வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கு விநாயக மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுவை ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலை டு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு 'டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ்' தரவரிசை சான்று வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில்,''எங்கள் கல்லூரியின் நிலையான பல்வேறு முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளோம். கல்லூரியின் கட்டமைப்பு, பல்வேறு ஆற்றல் மேலாண்மையை நடை முறைபடுத்துதல், மறுசுழற்சி மேலாண்மை , சமூக சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது வெறும் கல்வி சார்ந்தது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் சமூக பாதுகாப்பு சார்ந்த பல்வேறு செயல்பாடுகளையும் மாணவர்களுக்கு அளிக்கிறது என்றார்.

இவ்விருது பெறுவதற்கு உறுதணையாக செயலாற்றிய துறையின் டீனுக்கு பல்கலைகக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். தரவரிசை சான்றை துறையின் டீன், பல்கலைக்கழக வேந்தரிடம் கொடுத்து வாழ்த்துகளை பெற்றார்.

Tags:    

Similar News