புதுச்சேரி

நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து நர்சுகள் போராட்டம்

Published On 2023-08-09 08:07 GMT   |   Update On 2023-08-09 08:07 GMT
  • நோயாளிகள் அவதி
  • போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

புதுவை அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் செவிலிய அதிகாரிகளின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பதவி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த செவிலிய அதிகாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மதர் தெரேசா பட்டமேற்படிப்பு மையத்தில் செவிலிய பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமை காலை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் ஜெயராம் சியாமளா, ஸ்டெல்லா, சந்தானலட்சுமி, அமுதசரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் செயலாளர் ஹரிதாஸ், அமைப்பு செயலாளர்கள் செல்வி, கிறிஸ்டினா சங்கீதா ஆகியோர் பேசினர். போராட்டத்தை வாழ்த்தி சம்மேளன ஆலோசகர் கீதா, கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன்,

பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ஜவஹர் மற்றும் சுகாதார சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி, துணை தலைவர் விநாயகம், அமைப்பு செயலாளர்கள் மணிவாணன், ஜெகநாதன், செயலாளர்கள் சதீஷ், கலைவாணி, பொருளாளர் கிரி ஆகியோர் பேசினர் . இணைப்பு சங்க நிர்வாகிகள் சித்ரா, தனலட்சுமி, சுதாகர், ஜெகதீசன், காயத்ரி, திருமலை, இளையதாசன், லட்சுமி, சுந்தரமூர்த்தி, திருவரசன், சரவணன், ஆறுமுகம், தனசீலன், வெற்றிவேல், பாலமுருகன், இந்திரா, வைஜெயந்திமாலா, வள்ளி, சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் பாக்கியவதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News