புதுச்சேரி

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய முத்து ரத்தினம் அரங்கம் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள்

கனகன் ஏரியில் 1½ டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய என்.எஸ்.எஸ். மாணவர்கள்

Published On 2023-07-24 14:26 IST   |   Update On 2023-07-24 14:26:00 IST
  • நாட்டு நலப்பணித் திட்ட 50 மாணவர்கள் கலந்து கொண்டு ஈடுபட்ட னர்.
  • அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் ஜெயந்தி செய்திருந்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி மற்றும் இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 3-வது வாரமாக கனகன் ஏரி கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி 2-வது முறையாக நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 1½ டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. இப்பணியில் நாட்டு நலப்பணித் திட்ட 50 மாணவர்கள் கலந்து கொண்டு ஈடுபட்ட னர். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் ஜெயந்தி செய்திருந்தார்.

Tags:    

Similar News