புதுச்சேரி

தூய்மை பணியை ஜான்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

தூய்மை பணி செய்த என்.எஸ்.எஸ். மாணவர்கள்

Published On 2023-08-13 10:39 IST   |   Update On 2023-08-13 10:39:00 IST
  • ஜான்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
  • நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 50பேர் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவ கவுண்டன்பாளை யம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 6-வது வாரமாக சாரம் ஞானபிரகாசம் நகர் எஸ்.ஆர்.எஸ் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்த னன் தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் எம்.எல்.ஏ. தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியிணை தொடங்கி வைத்தார்.

இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 50பேர் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வழி நடத்தினார். சிறப்பு விருந்தி னராக குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்தி கேயன் கலந்துகொண்டு நாட்டு நல பணித்திட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் விரிவு ரையாளர் நெடுஞ்செழியன் உடன் இருந்தார். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவு ரையாளர் ஜெயந்தி சிறப்பாக செய்திருந்தார்.

Tags:    

Similar News