ரத்ததானம் செய்த புதுவை தி.மு.க. இளைஞரணியினருக்கு தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கிய காட்சி.
புதுவை தி.மு.க. இளைஞர் அணி ரத்த தானம்
- 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் இறந்தனர்.
- இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் இறந்தனர்.
2 பஸ்களிலும் பயணித்த 80-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. ஜிப்மருக்கு நேரில் வந்து காயமடைந்த வர்களுக்கு தேவையான உதவிளை செய்து டாக்டர்களை சந்தித்து உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
இதனிடையே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்தம் தேவைப்பட்டது. இதனை யடுத்து புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தி.மு.க. இளைஞரணியினருக்கு தகவல் அளித்து ரத்த தானம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து ஜிப்மர் மருத்துவனையில் தி.மு.க. இளைஞரணியினர் ரத்த தானம் வழங்கினர்.
இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் அருண் நம்புராஜ் ஆகியோருடன் புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா, மாநில அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர் களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்த தி.மு.க. இளைஞரணியினருக்கு தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.