புதுச்சேரி

புதிய ஆழ்குழாய் கிணறு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்த காட்சி.

புதிய ஆழ்குழாய் கிணறு-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்

Published On 2023-08-16 13:39 IST   |   Update On 2023-08-16 13:39:00 IST
  • குடிநீர் வினியோக குழாயுடன் இணைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது.
  • ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி த்துறையால் தொடங்கப்பட்டன.

புதுச்சேரி:

வாணரப்பேட்டை, தாமரைநகர் ஜெகநாத படையாட்சி வீதி, கம்பன் வீதி, கோவிந்த செட்டி தோட்டம், அன்னை தெரேசா நகர், ஜெ.ஜெ நகர், பல்லவன் வீதி, இன்ஜினியர் தோட்டம், அன்னை தெரேசா வீதி, காளியம்மன் தோப்பு, அலேன் வீதி, சித்தி விநாயக தோப்பு, கஸ்தூரிபாய் நகர், முருகசாமி நகர், ஈஸ்வரன் கோயில் தோப்பு, ஜெயவிலாஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மோட்டார் பொருத்துதல் மற்றும் குடிநீர் வினியோக குழாயுடன் இணைத்தல் ஆகிய பணிகள் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி த்துறையால் தொடங்கப்பட்டன.

இந்த பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை , தலைமைப்பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர், பாஸ்கர், உதவி பொறியாளர், வாசு, இளநிலை பொறியாளர். வெங்கடேசன்மற்றும் ஊர் பொதுமக்கள் நாராயணன், ராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன், சேகர், ஜெய ராமன், ஆரோக்கியதாஸ், கலிய பெருமாள், கழக அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News