எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. அண்ணாசாலையில் நீர், மோர் வழங்கிய காட்சி.
அண்ணாசாலையில் நீர்மோர் பந்தல்-எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
- புதுவை அருகே உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் அண்ணா சாலையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
புதுச்சேரி:
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து புதுவை மக்களை காக்கும் வகையில், உருளை யன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் அண்ணா சாலையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், ராமசாமி, தர்மராஜ், சன். சண்முகம், பிரபாகரன், இளம்பரிதி, தொகுதி செயலாளர்கள் தியாகராஜன், நடராஜன், வடிவேல் மற்றும் உருளையன்பேட்டை தொகுதி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.