புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியை நபார்டு வங்கி அதிகாரிகள் சந்தித்த காட்சி.

உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி வேண்டும்-நபார்டு வங்கி அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்

Published On 2023-04-12 12:37 IST   |   Update On 2023-04-12 12:37:00 IST
  • புதுவை மாநிலத்திற்கு நபார்டு வங்கி ரூ.116 கோடி 47 லட்சத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • புதுவை மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்க ளுக்கான நிதியை தர தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்திற்கு நபார்டு வங்கி ரூ.116 கோடி 47 லட்சத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதில் ரூ.50 கோடியே 25 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை சட்டசபையில் நபார்டு வங்கி அதிகாரிகள் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.

அப்போது, நடப்பு நிதியாண்டிலும் புதுவை மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்க ளுக்கான நிதியை தர தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

நடப்பு நிதியாண்டுக்கான திட்டங்களை தயாரித்து அனுப்புவதாகவும், அதற்கு அதிக நிதி வழங்க வேண்டும் என முதல்- அமைச்சர் ரங்கசாமி கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், நிதி செயலர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News