புதுவை பா.ஜனதா சார்பில் தேசிய பயங்கரவாத தின நினைவு மவுன ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.
தேசிய பயங்கரவாத தின நினைவு மவுன ஊர்வலம்
- மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
- உழவர்கரை மாவட்ட த்தில் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 76-வது தேசிய பிரிவினையின் பயங்கர தினத்தை நினைவுகூறும் விதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
உழவர்கரை மாவட்ட த்தில் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், ஜான் குமார் எம்.எல்.ஏ, மாநில துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், முருகன், பா.ஜனதா மாநில செயலாளர்கள் லதா, ஜெயந்தி பட்டியலின மாநில தலைவர் தமிழ்மாறன், அலுவலக செயலாளர் கவுரிசங்கர் உள்ளிட்ட பா.ஜனதா மாநில மாவட்ட தொகுதி அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மவுன ஊர்வலம் கதிர்காமம் பெண்கள் கலைக்கல்லூரி அருகில் துவங்கி இந்திராநகர் தொகுதி வழியாக முருகா திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது.