அரசுப் பள்ளியில் தேசிய விளையாட்டு நாள் நடந்த போது எடுத்த படம்.
அரசுப் பள்ளியில் தேசிய விளையாட்டு நாள்
- தேசிய விளையாட்டு நாள் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.
புதுச்சேரி:
செல்லிப்பட்டு அரசுப் உயர்நிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு நாள் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். தலைமை யாசிரியர் அனிதா தலைமை தாங்கினார்.
விழாவில் தேஷ்னா தொண்டு நிறுவனம் சார்பில் அமலா, நந்தகுமார், இளம்பரிதி மற்றும் ரிஷி ஆகியொர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். ஆசிரியை அமலா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியைகள் ராஜேஷ்வரி, மீனா, அமுதா, ஜான்சி, விமலி மற்றும் இளவரசி ஆகியோரும் பள்ளி ஊழியர்களும் செய்திருந்தனர். முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.