புதுச்சேரி

பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த நேஷனல் பள்ளி மாணவர்களை பள்ளியின் சேர்மன் டாக்டர் கிரண்குமார் பாராட்டிய காட்சி.

நேஷனல் பள்ளி ஒட்டுமொத்த சுழற்கோப்பை வென்று சாதனை

Published On 2023-09-08 05:38 GMT   |   Update On 2023-09-08 05:38 GMT
  • இவ்வாண்டும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
  • தாளாளர் எழிலரசி, தலைமை ஆசிரியை உமா ஆகியோர் சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பாராட்டினர்.

புதுச்சேரி:

புதுவை, தவளக்குப்பம்,நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், புதுவையில் நடைப்பெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளில் பங்குப்பெற்று ஒட்டுமொத்த சுழற்கோப்பை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

இந்த சாதனை குறித்து தவளகுப்பம் நேஷனல் பள்ளியின் சேர்மன் டாக்டர்.கிரண்குமார் கூறியதாவது:-

"ஒவ்வொரு ஆண்டும் எங்களது பள்ளி, அரசு சார்பில் நடத்தப்படும் போட்டிகளிலும் தனியார் பள்ளிகள் சார்பில் நடைபெறும் போட்டி களிலும் மாணவர்களை பங்கேற்க செய்து அவர்களின் படைப்பாற்றல் திறனையும் அறிவாற்றலையும் பன்முகத் திறமையும் வெளிக்கொணரும் வகையில் அவர்களை உருவாக்கி வருகிறோம்.

அந்த வரிசையில் இவ்வாண்டும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமை யை வெளிப்படுத்தினர். தற்போது எங்களது பள்ளி மாணவர்கள் பள்ளி களுக்கு இடையே யான போட்டி களில் பங்கு பெற்று 12 முதல் பரிசுகளையும் 7 2-ம் பரிசுகளையும் மற்றும் 3-ம் பரிசினையும் பெற்று சாதனைப் படைத்துள்ள துடன் ஒட்டு மொத்த சுழற்கோப்பையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரிய- ஆசிரியைகளையும் மாணவச் செல்வங்களையும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களையும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளையும் வெற்றிக்கு உழைத்த ஆசிரி யர்களையும் பள்ளியின் சேர்மன் டாக்டர்.கிரண்குமார், தாளாளர் எழிலரசி, தலைமை ஆசிரியை உமா ஆகியோர் சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பாராட்டினர்.

Tags:    

Similar News