புதுச்சேரி

கோப்பு படம்

நாராயணசாமி நாவடக்கத்துடன் விமர்சனம் செய்ய வேண்டும் அன்பழகன் கண்டனம்

Published On 2022-08-02 08:58 GMT   |   Update On 2022-08-02 08:58 GMT
  • இருண்ட ஆட்சி கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும்
  • அரசை அடிமை ஆட்சி என கூறுவது கண்டனத்திற்குரியது

புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தின் இருண்ட ஆட்சி கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும். இந்த இருண்ட ஆட்சிக்கு தலைமை வகித்த நாராயணசாமி, தேசிய ஜனநாயக முன்னணி அரசை அடிமை ஆட்சி என கூறுவது கண்டனத்திற்குரியது.

கட்சி தலைமையை திருப்திப்படுத்த, விளம்பர மோகத்துக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். மக்கள் புறக்கணிப்பார்கள் என புரிந்துகொண்டு தேர்தலில் போட்டியிடாமல் வஞ்சகத்தோடு ஒளிந்து கொண்டார். அவர் ரங்கசாமி தலைமையில் நடைபெறும் நல்லாட்சி பற்றி குறைகூற தார்மீக உரிமை இல்லை.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சாவர்க்கர் போன்றவர்களை பற்றி குறைத்துப் பேச நமக்கு என்ன தகுதி உள்ளது? என நாராயணசாமி உணர வேண்டும்.

மத்திய அரசின் போதிய நிதி பெற முடியாத சூழ்நிலையிலும், மத்திய அரசுடனும், கவர்னருடனும் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி ரங்கசாமி நல்லாட்சி நடத்துகிறார்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல் வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாராயணசாமி கிடப்பில்போட்டார். தற்போது இத்திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் பட்டு வருகிறது. கடந்த காலத்தில் கிடப்பில் போட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தரம் தாழ்ந்து முதல்-அமைச்சரையும், அரசையும் விமர்சனம் செய்வது மதிப்புமிக்க செயல் இல்லை. எனவே நாராயணசாமி அரசை விமர்சனம் செய்யும்போது நாவடக்கத்துடன் விமர்சனம் செய்வது நல்லது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News