புதுச்சேரி

கோப்பு படம்.

எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-15 11:23 IST   |   Update On 2023-07-15 11:23:00 IST
  • இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் ஞானபிரகாசம், தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
  • எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி:

காமராஜர் நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் திவாகர், செயலாளர் ஜெகதீஷ் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், தமிழ் தேசியப் பேரியக்கத்தின் துணை பொதுச்செயலாளர் அருணாபாரதி, புதுவை மாநில செயலாளர் வேல்சாமி, கைவினைஞர்கள் வாழ்வுரிமை கட்சி பொதுச்செயலாளர் தனாளன், தமிழர்களம் அழகர், நாம் தமிழ் கட்சி பொருளாளர் இளங்கோ வன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி, இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் ஞானபிரகாசம், தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.

காமாட்சியம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணங்களின் மூலம் அபகரித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மோசடிக்கு துணைநின்ற அரசு அதிகாரிகளை கைதுசெய்து சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

Similar News