புதுச்சேரி
- குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் புதுவை கடற்கரைக்கு வந்தார்.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடற்கரையை சுற்றி பார்க்க சென்றார்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி காமராஜ் சாலையை சேர்ந்தவர் சுரேஷ். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் புதுவை கடற்கரைக்கு வந்தார். கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரக அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடற்கரையை சுற்றி பார்க்க சென்றார்.
பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து சுரேஷ் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.