புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, கட்டிட பணியை தொடங்கிவைத்த காட்சி.

குளியல் அறையுடன் நவீன கழிப்பிடம்

Published On 2023-05-14 13:43 IST   |   Update On 2023-05-14 13:43:00 IST
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, கட்டிட பணியை தொடங்கிவைத்தார்

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ் தாய் நகர் பகுதியை சார்ந்த கருமாதிக்கொட்டகை மற்றும் அங்கன்வாடிக்கு பல வருட காலமாக கழிப்பிடம் இல்லை. இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ, ரோட்டரி கிளப் தலைவர் சகோதரர் அனிபால் நேருவிடம் மக்கள் நலம் கருதி இக்கட்டிடங்களை அமைத்து தரும்படி கேட்டுக்கொண்டார்.இதையடுத்து இக்கட்டிடங்கள் ரோட்டரி கிளப் மூலம் கருமாதி கொட்டகையில் நவீன கழிப்பிடம் மற்றும் குளியல் அறையும், அங்கான்வாடியில் நவீன கழிப்பிடமும் குளியல் அறையும் கட்டும் பணி நடக்கிறது .இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ஆரோக்கியராஜ், மீனவர் அணி துணை அமை ப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் காந்தி மற்றும் சங்கரநாராயணன், கார்த்திக், பவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News