புதுச்சேரி

அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்திய காட்சி.

கொம்யூன் அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை

Published On 2023-06-18 13:41 IST   |   Update On 2023-06-18 13:41:00 IST
  • சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  • வளர்ச்சி பணிகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி:

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரி களுடன் சட்ட சபையில் உள்ள வேளாண்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்க மன்னர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மங்கலம் தொகுதி சேர்ந்த உதவியாளர் திருக்காஞ்சி கணுவாப்பேட்டை, பங்கூர், அரியூர் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பூஜைகள் செய்து பணிகள் தொடங்கப்படாமல் உள்ள இடங்கள் பற்றியும் அதற்கான காரணம் குறித்தும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கேட்டறிந்தார்.

பிறகு அடுத்த கட்டமாக மங்களம் தொகுதியில் நடைபெறவிருக்கும் தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News