புதுச்சேரி

கோப்பு படம்.

null

போதை கும்பல் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நள்ளிரவில் ரோந்து-போலீசாருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிரடி உத்தரவு

Published On 2023-04-10 12:15 IST   |   Update On 2023-04-10 12:17:00 IST
  • புதுவையில் மது போதையில் இரவில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலைகளில் போதை கும்பல் அட்டகாசம் செய்து வருவது அதிகரித்துள்ளது.
  • புதுவை மக்களிடையே பெரும் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் மது போதையில் இரவில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலைகளில் போதை கும்பல் அட்டகாசம் செய்து வருவது அதிகரித்துள்ளது.

போதை கும்பல் அட்டகாசத்தால் சில நாட்களுக்கு முன்பு என்ஜினியர் ஒருவர் பலியாகியுள்ளார். இது புதுவை மக்களிடையே பெரும் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ரெஸ்டோ பார் திறக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே முதல்- அமைச்சர் ரங்கசாமி, நகர பகுதி போலீஸ் அதிகாரிகளை நேற்று அழைத்து பேசினார். அப்போது, இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து நகர பகுதியில் நள்ளிரவிலும் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மது போதையில் வாகனங்களில் சுற்றி வருபவர்களை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News