புதுச்சேரி

மே தின விழாவில் எதிர்கட்சி தலைவர் சிவா கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

புதுவையில் மே தின விழா கொண்டாட்டம்

Published On 2023-05-01 14:46 IST   |   Update On 2023-05-01 14:46:00 IST
  • கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இனிப்பு , உணவு பொட்டலங்கள் , சீருடைகள் வழங்கப்பட்டது.

 புதுச்சேரி:

நாடு முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் தினத்தையொட்டி கதிர்காமம் என்.ஆர்.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. என்.ஆர்.டி.யூ.சி. மாநில கவுரவ தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

புதுவை மாநில தொ.மு.ச. சார்பில் சுதேசி பஞ்சாலை, மாஸ் ஹோட்டல், கதிர்காமம், புவன்கரே வீதி ஆட்டோ ஸ்டேண்ட், எம்.பி.டி.எல். தொழிற்சாலை, திருவள்ளுவர் பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய ஆட்டோ தொழிற்சங்கங்கள், தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை, பி.ஆர்.டி.சி. பணிமனை, வில்லியனூர் ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட 30 இடங்களில் தொ.மு.ச. கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொ.மு.ச. பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கி னார். தொ.மு.ச. நிர்வாகிகள் சிவக்குமார், மிஷேல், இமாணு வேல், விமல், ராஜேஷ், நாகமுத்து, கண்ணன், ஐய்யனார், கிருஷ்ணமூர்த்தி, ரவி, அண்ணாதுரை, சீனுவாசன், காந்தி, அமாவாசை, இக்பால் பாஷா, ராஜேந்திரன், திருக்குமரன், முருகன், சண்முகம், தங்கவேல், பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், தொ.மு.ச. கவுரவ தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தொ.மு.ச. கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை, மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் மாநில துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அ. தைரியநாதன், பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண்.குமரவேல், ஜே.வி.எஸ். சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

புதுவை மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

ரெயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்டு, பஸ் நிலையம், முதலியார் பேட்டை, உப்பளம், வாணரப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் சாலை ஆட்டோ ஸ்டாண்டு மற்றும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள், மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் தொழிலாளர் தினம் இன்று கொண்டா டப்பட்டது.

லெனின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தொழிற் சங்க கொடியை ஓம்சக்தி சேகர் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பி னர்களுக்கு சீருடைகளை வழங்கினார். புதுவை மாநில ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் மே தின விழா இன்று கொண்டாடப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், பஸ் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், மீனவர் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள், லோடு கேரியர் ஓட்டுநர்கள், அரசு சார்பு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள், பெரிய மார்க்கெட் அடி காசு வியாபாரிகள், சண்டே மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் கொடியேற்றி இனிப்பு , உணவு பொட்டலங்கள் , சீருடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், பொதுச் செயலாளர் சேது செல்வம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவை மாநில கம்யூனிஸ்டு எம்எல் கட்சி சார்பில் மே தின விழா கொண்டா டப்பட்டது. ஏ.ஐ.சி.சி.டி.யு. இணைப்பு சங்கம் சார்பில் கிளைகள், தொழிற்சாலை வளாகங்களில் கொடி ஏற்றப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநில தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடியினை கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தொழிற்சங்கத்தின் கொடியை ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் ஏற்றினர்.

இதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News