புதுச்சேரி

மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கிய காட்சி.

தற்காப்புகலை பயிற்சி நிறைவு விழா

Published On 2023-03-31 10:25 IST   |   Update On 2023-03-31 10:25:00 IST
  • புதுவை தர்மபுரி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான 3 மாத காலம் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் இப்பள்ளியில் நடைபெற்றது இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
  • புதுவை கல்வித்துறை சமர சிக்‌ஷா பொறுப்பாளர் ஹெலன் ராணி கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார் .

புதுச்சேரி:

புதுவை தர்மபுரி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான 3 மாத காலம் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் இப்பள்ளியில் நடைபெற்றது இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்குபுதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தரராஜன் தலைமை தாங்கினார் .

விழாவில் தலைமை விருந்தினராக புதுவை கல்வித்துறை சமர சிக்ஷா பொறுப்பாளர் ஹெலன் ராணி கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார் .

மேலும் விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை பிரேமலதா சாந்தி பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்கள்.

பள்ளி பொறுப்பாசிரியை மாலா ஆசிரியர்கள் கீதா, சோமசுந்தரம், செந்தில்குமார் , சண்முக சுந்தரவேல், மாண வர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். மூத்த பயிற்சியாளர் சிவமதி தற்காப்பு கலையை பற்றி செயல் முறை விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News