புதுச்சேரி

விடுதலை சிறுத்தையினர் போராட்டம் நடத்திய காட்சி.


அடிப்படை வசதி கோரி விடுதலை சிறுத்தையினர் போராட்டம்

Published On 2023-10-25 15:08 IST   |   Update On 2023-10-25 15:08:00 IST
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டத்தில், புதுநகர், வார்க்கால் ஓடை பகுதியில் பகுதியில் முறையான வடிகால், பல்நோக்கு சமுதாய நலக்கூடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி:

பாகூர் தொகுதிக்குட்பட்ட கன்னியக்கோவிலை அடுத்துள்ள புதுநகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு கழிவு நீர் வடிகால் வாய்க்கால், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாகூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாகூர் தொகுதி துணைச் செயலாளர் தாயப்பன் தலைமை தாங்கினார். பாகூர் தொகுதி வட்டார காங்., தலைவர் கோபு, இந்திய மக்கள் பாதுகாப்பு சக்தி கழக தலைவர் அரிக்கி ருஷ்ணன், வார்க்கால்ஒடை முருகன், பழங்குடி விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், புதுநகர், வார்க்கால் ஓடை பகுதியில் பகுதியில் முறையான வடிகால், பல்நோக்கு சமுதாய நலக்கூடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காங்கிரஸ் பிரமுகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News