புதுச்சேரி

 வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம். குமரன் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-06 13:38 IST   |   Update On 2023-09-06 13:38:00 IST
  • கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோர்ட்டு நுழைவாயில் எதிரில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம். குமரன் தலைமையில் நடைபெற்றது.
  • புவனேஸ்வரி, இளங்கோவன், சுந்தர், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

இ.பைலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  கோர்ட்டு நுழைவாயில் எதிரில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம் குமரன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் கதிர்வேல் பொருளாளர் லட்சுமி நாராயணன் இணை செயலாளர்கள் திருமலைவாசன் சதீஷ்குமார், வடிவரசன், சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், சிவராமன், சந்தோஷ்குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலியமூர்த்தி,

திருகண்ண செல்வன், பச்சையப்பன், சுப்பிரமணியன், அம்மாவாசை, சுப்பிரமணி, சாய் ராஜகோபால், குமரன், லட்சுமணன், நாராயணகுமார், ராமன், கார்த்திக், ராஜ பிரகாஷ், முத்துக்குமரன், கார்த்திகேயன், வேலு பிரபாகரன், தனசேகரி, புவனேஸ்வரி, இளங்கோவன், சுந்தர், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News