புதுச்சேரி

வானூர் நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் அகற்றப்பட்டது கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-21 14:17 IST   |   Update On 2023-07-21 14:17:00 IST
  • உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்ப ட்டதாக தெரிவித்தனர்.
  • விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க என கோஷன் எழுப்பினர்.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள வானூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் இருக்கைக்கு பின்புறம் மேல் பகுதியில் இருந்த அம்பேத்கர் புகைப்படம்  முன்தினம் இரவு அகற்றப்பட்டது.

இதுகுறித்து வானூர் பார் அசோசியேசன் நிர்வாகிகள் நீதிமன்ற நிர்வாகத்திலும் கேட்டபோது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்ப ட்டதாக தெரிவித்தனர்.

இதனை கண்டித்து நேற்று புதுவை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட வக்கீல் சங்கத்தினர், இன்று வக்கீல் சங்கத் தலைவர் ஜானகிராமன் தலைமையில் கோர்ட் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அகற்றப்பட்ட அம்பேத்கர் படத்தை நிறுவும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மணிப்பூரில் நடந்த பெண்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க என கோஷன் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்க செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் தியாகராஜன், நிர்வாகிகள் ஹரிஹரன், அழகுமுருகன், தமிழரசன், தட்சிணாமூர்த்தி, திருவேங்கடம், திருவேங்கடம், முருகேசன், அய்யனார், முனுசாமி, ஆறுமுகம் செல்வம், ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News